திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புறப்படுவதற்கு தயாராக இருந்த பொழுது அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் தனது கைப்பை, மணிப்பர்ஸ் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருந்த யுஏஇ திர்ஹாம்சை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த வெளிநாட்டு கரன்சியின் இந்திய ரூபாய் மதிப்பு 9 லட்சத்தி 17 ஆயிரத்து 910 ஆகும். மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.