திருச்சி தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவை சார்பில் 126 ஆவது தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் கௌரி கிருஷ்ணா குளிரூட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கத்திற்கு கற்பகம் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி என் டிவியின் மேனேஜிங் டைரக்டர் சதீஷ் கலந்து கொண்டு “முயன்றேன் வென்றேன்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த கூட்டத்தில் அரிமா சங்கத்தின் நிர்வாகி சுதர்சனன் கலந்து கொண்டு அறிவை விரிவு செய் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த பயிலரங்கில் நிறுவனத் தலைவர்கள் ராஜா, கோபி மற்றும் சுய முன்னேற்ற பயிற்சியாளர் எழுத்தாளர் தங்கவேலு மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிலரங்கத்தின் நோக்கமாக தன்னம்பிக்கை தலைத்திடவும், ஆழ்மனதின் ஆற்றலை மேம்படுத்தவும்,
தோல்வி பயத்தை தகர்த்தெறியவும் வெற்றியை நோக்கி விரைந்திடவும், சமுதாயத்தில் சிறந்து விளங்கிடவும், எண்ணங்களில் ஏற்றம் காணவும், பலங்களை பன்மடங்கு பெருக்கிடவும், சாதனைகள் பல புரிந்திடவும், குடும்பத்தில் குதூகலம் நிலவிடவும், நாடு நலமுடன் விளங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட இந்த பயலரங்கத்தின் நோக்கமாக நடைபெற்றது.