திருச்சி மாவட்டத்தில் மானிய விலையில் பவர்டில்லர்கள், விசை களையெடுக்கும் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்கள் (ம) விசை களையெடுக்கும் கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமத்திற்கு பவர் டில்லர்கள் சிறு, குறு, பெண், விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85 ஆயிரமும், ஆதி திராவிட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.19 ஆயிரமும் விசை களையெடுக்கும் கருவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரமும் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் நில வரைபடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதற்பக்க நகல். சிறு குறு ஆதிதிராவிட விவசாயி சான்றிதழ், நிழற்படம் ஆகியவற்றுடன் உழவன் செயலியில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மானிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம். கீழ்க்கண்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உதவி செயற் பொறியாளர் (வேபொ), எண் 2. பொன்மலைப் பட்டிரோடு ஜெயில் கார்னர், திருச்சி – 620 020. கைபேசி எண் 9942112882 மற்றும். உதவி செயற் பொறியாளர் (வேபொ). I8H/1A கண்ணதாசன் தெரு, பார்வதிபுரம், முசிறி 621 211. கைபேசி எண்: 9842435242 உதவி செயற் பொறியாளர் (வேபொ). கணபதி நகர், மற்றும் வடக்கு விஸ்தரிப்பு தாளக்குடி. இலால்குடி. 621 216. கைபேசி எண்: 9842435242 மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிப் குமார் தெரிவித்துள்ளார்.