திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அழுந்தூரில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு லாரி டயர்கள் திருட்டு வழக்கு சம்பந்தமாக, திருவரம்பூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் அவர்களின் உத்தரவின் படி திருவெறும்பூர் உட்கோட்ட தனிப்படை ஆய்வாளர் கமலவேணி அவர்களின் தலைமையில்

தலைமை காவலர்கள் முத்துகிருஷ்ணன், அருண்மொழிவர்மன், இன்பமனி, தனசேகரன்,மற்றும் முதல் நிலை காவலர்கள் ராஜேஷ், இளையராஜா அறிவழகன் மற்றும் முத்துக்கருப்பன் ஆகியோர்கள் விரைந்து திருப்பத்தூர் மாவட்டம், வானியம்பாடி தாலுக்கா, ஆலங்காயம், கல்லறைப்பட்டி சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தன் வயது 48 என்பவரை பிடித்து.

சுமார் ஒன்பது லட்சம் மதிப்புள்ள டயர்கள் மீட்கப்பட்டு, டயர்களை திருட பயன்படுத்திய சுமார்.18/- லட்சம் மதிப்புள்ள லாரியும் மீட்கப்பட்டு குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *