திருச்சி தென்னூர் உழவர் சந்தை எதிரே அமைந்திருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆனார் பாக் வொர்க் வக்பு வாரியத்திற்கு சொந்தமான தர்காவை நேற்று இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் அடியாட்களுடன் இடித்து தள்ளினர். இதனை அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் தமுமுக, எஸ்டிபிஐ, தும்முல்லா சபை தலைவர், ஜமாத்தின் மாவட்ட தலைவர் இனாமுல் அசன் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து தர்காவை இடித்து தர மட்டமாக்கிய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் தில்லை நகர் காவல் துறை உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் மாலை அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஒன்று சேர்ந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு தர்காவை இடித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக வந்து தங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்து சுமார் ஒரு மணி நேரமாக இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சுவார்த்தையில் தர்கா இடுப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இஸ்லாமிய அமைப்பினரின் சாலை மறியலால் திருச்சி மாவட்ட ஆட்சியார் அலுவலக சாலையில் சுமார் 2 மணி நேரமாக நேரம் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.