திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு சார்பில் முப்பெரும் விழா மற்றும் 26 ஆம் ஆண்டு விழா, சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விழா, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் தலைவரும் புனித வளனார் கல்லூரியின் கிரிக்கெட் வீரருமான மறைந்த விக்னேஷ்வரன் படத்திறப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னதான சமாஜம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தலைமை சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாணவிகளுக்கு பாராட்டு சான்று பள்ளி உபகரண பொருட்கள் மற்றும் மரகன்றுகளை வழங்கி சிறப்பு செய்தார். இவ்விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மண்டல -3 தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார் 13வது மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மருந்துகடை மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவை செய்து வரும் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களுமான ஸ்கோர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பத்மஸ்ரீ சுப்புராமன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முனைவர் கலைச்செல்வன்.அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் சமூக ஆர்வலர் மோகன்ராம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் யோகா விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் மற்றும் ஏழை மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் Dr.சங்கர் செய்திருந்தார்.