திருச்சியில் அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த குத்து சண்டை போட்டியில் 13 வயது முதல் 19 வயது வரை உள்ள குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியானது மூன்று ரவுண்ட் மற்றும் மூன்று நிமிடம் என கணக்கிடப்பட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி, பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தரகாண்ட், கேரளா, கர்நாடகா, மராட்டியா, ஆந்திரா உள்பட 12 மாநிலங்களில் இருந்து 38 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த குத்துச்சண்டை போட்டிக்கான ஏற்பாடுகளை சிவராமகிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் செய்து இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாக்ஸ்சிங் கவுன்சில் தலைவர் பிரகடர் முரளிதர ராஜா பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அகில இந்திய தொழில் முறை குத்துச்சண்டை போட்டி திருச்சியில் நடைபெற்றது. ஏன் இந்த போட்டியை தமிழக அரசும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைப்பது என்னவென்றால் இந்த தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் மூலம் ஏசியா மற்றும் உலக அளவில் குத்துச்சண்டை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் உருவாகி வருகின்றனர். எனவே இந்த குத்துச்சண்டை போட்டிக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.