தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் அரியமங்கலம் கிளை மற்றும் ரஹ்மத் பள்ளிவாசல் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.முகமது ராஜா அவர்கள் தொடங்கி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் சையது முஸ்தபா முன்னிலையில் இந்நிகழ்வை ரஹ்மத் பள்ளிவாசல் முத்தவல்லி ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் அரியமங்கள் கிளை தலைவர் லியாகத் அலி,மாவட்ட துணை, அணி நிர்வாகிகள், ஜாமத்தார்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.