யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கத்தின் 12-ஆம் ஆண்டு மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டினை யூனியன் வங்கி சென்னை மண்டல துணை பொது மேலாளர் முருகன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாநில மாநாட்டில்., வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக அரசமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கிட உயர் சட்டம் கொண்டுவர வேண்டும்,
தமிழகத்தில் பணியாற்றும் வெளி மாநில அதிகாரிகள் தமிழ் மொழியை கற்றிடவும் அதன் வழியே வாடிக்கையாளர் சேவை செய்திடவும் வசதியாக அதிகாரிகளுக்கு தமிழ் மொழி கற்றிட உரிய வாய்ப்புகள் அளித்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள யூனியன் பேங்க் ஆப் வங்கி கிளைகளில் உள்ள வாடிக்கையாளர் பயன்பாட்டுப் படிவங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலும் இருத்தல் வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.