ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் , சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணி ஒருவரை சோதனை செய்ததில்.
அவரது உடையில் மறைத்து வைத்திருந்த 145.000 கிராம் எடையுள்ள ஒரு தங்கத் கட்டி மற்றும் 90,000 கிராம் எடையுள்ள ஒரு தங்கச் சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது இவற்றின் மொத்த எடை 235.000 கிராம், மதிப்பு ரூ. 14,12,820/- ஆகும் மேலும் தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த பயனிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.