தினமும் யோகா செய்வதன் மூலம் எடை குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். உடல் உறுப்பு இயக்கங்கள் சீராக இருக்கும். முறையாக பயிற்சி பெற்று யோகா தினமும் செய்து வந்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். தற்போது உலகம் முழுவதும் யோகாவை கற்று, தினமும் யோகா பயிற்சி செய்து வருகின்றனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 36 மில்லியன் மக்கள் யோகாவில் ஈடுபட்டு வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நீங்களும் யோகா செய்து நீண்ட ஆரோக்கியம் பெறலாமே.
முதலில் குறிப்பாக குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் யோகா பயிற்சியை கற்றுக் கொள்வது மூலம் உடல் நலம் மட்டுமல்லாமல், அறிவுத்திறனும் நன்கு வளரும். ஆகையால் இன்று திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தங்களுக்கு தெரிந்த யோகாசனத்தை செய்து காண்பவர்களை ஆச்சரியப்படுத்தினர். இதனை தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டது. இப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளை தேசிய அளவிலான யொக போட்டியில் பங்கேற்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.