மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து திருச்சி மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந்தேதி பிற்பகல் 4.00 மணியளவில் திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ். மஹாலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மூத்த தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன். பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், பா.வளர்மதி, செல்லூர் ராஜீ, காமராஜ், மணியன், டாக்டர் விஜயபாஸ்கர். ஆர்.பி.உதயக்குமார், மாநில நிர்வாகிகள் ராஜன் செல்லப்பா, வி.பி.பி. பரமசிவம்,மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது சம்மந்தமாக இன்று திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள எஸ்.பி.மஹாலில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு நடத்தி ஆலோசனை செய்தனர். இதில் திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, மாநில அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவபதி, மாநில இணைச்செயலாளர் முன்னாள் மேயர் சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐய்யப்பன், முன்னாள் அரசு கொறடா மனோகரன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பகுதி செயலாளர்கள் கலைவாணன், எம். ஆர்.ஆர்.முஸ்தபா, என்ஜினியர் இப்ராம்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.