108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள கோபுரத்தின் முகப்பு பகுதி நேற்று விடியற்காலை 1.50 மணிக்கு திடீரென இடிந்து விழுந்து.
கிழக்கு வாசலில் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் 2வது நிலை சுவர்கள், சில தினங்களாக விரிசல் ஏற்பட்டு இருந்தன விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர், மளமளவென இடிந்து விழுந்தது. தற்போது இடிந்து விழுந்த கோவில் முகப்பு பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.