மணிப்பூர் மாநிலத்தில் பெருவாரியான இனமான மைத்தேயி சமூகத்தினருக்கும், பழங்குடியினர் இனமான குகி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இளக் கலவரமாக உருவெடுத்து மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறது. பெண்கள் ஆடையின்றி முழு நிர்வணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது மனித சமூகம் வெட்கி தலை குனிய வேண்டிய செயலாகும். மூன்று மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இந்த இனக் கலவரத்தால் 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட மோசமான நிலை மணிப்பூரில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எதிர்க்கட்சிகள் கண்டன குரல் எழுப்புகின்றன. பாராளுமன்றத்தில் குரல் எழுப்புகின்றனர். ஆனால் மோடி அரசு மணிப்பூர் இனக் கலவரம் குறித்து இதுவரை வாய்த் திறக்க மறுக்கிறார். எனவே இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைக்கு காரணமான ஒன்றிய அரசை, குறிப்பாக பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெசுதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்ற கழக மாநகர மாவட்டச் செயலாளர் திவாணன், AITUC பொதுச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்.