திருச்சி மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தலித் கிறிஸ்தவர் பேரவை சார்பில் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலித் கிறிஸ்தவ பேரவையின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜான்சன்துரை தலைமை வகித்தார்.
இதில் கடந்த 73 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தவர் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது இதனால் தீண்டாமை கொடுமை கல்வி வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது மேலும் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் சட்ட பாதுகாப்பின் தலித் கிறிஸ்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் சமூக பொருளாதார நிலையிலும் மிகவும் பின்னடைவை அடைந்துள்ளனர்,
ஏனெனில் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கமிஷங்களும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் தலித் கிறிஸ்துவர்களுக்கு எஸ்.சி உரிமை வழங்கலாம் என பரிந்துரைத்த பின்னரும் கூட ஒன்றிய அரசால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பின் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்…