திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை புதிய கண்காணிப்பாளராக டாக்டர் வருண் குமார் இன்று காலை பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு எஸ்பி சுஜித் குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் கூறி வரவேற்றார்.
மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போதை ஒழிப்பிற்கான உறுதிமொழியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண் குமார் தலைமையில் அனைத்து காவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.