திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள வெல்கேர் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) அதிநவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அமெரிக்கா வாழ் இந்தியரான SUNDAR 45 வயது மென்பொருள் பொறியாளரான இவர் விளையாடும் பொழுது வலது கால் மூட்டில் குருத்தெலும்பில் காயம் (CARTILAGE INJURY) ஏற்பட்டு சிகிச்சைக்காக திருச்சி (வெல்கேர் மருத்துவமனை, ) வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவக்குழு அவருக்கு AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) என்னும் அதிநவீன அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டது. அந்த AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) என்னும் அதிநவீன அறுவை சிகிச்சையை வெல்கேர் மருத்துவக்குழு Ortho HOD & Chief Orthopedic Surgeon மருத்துவர் குமரேசபதி, தலைமையில் மருத்துவர்.கீதன், மருத்துவர்.குகன் மருத்துவர் ரமேஷ், மற்றும் மருத்துவர் பிரவீன் ஆகியோர் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
குறிப்பாக AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) என்னும் அதிநவீன அறுவை சிகிச்சை திருச்சி மற்றும் அருகிலுள்ள சில மாவட்டங்களில் ஆய்வு செய்ததில் முதல் முறையாக திருச்சி வெல்கேர் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் தில்லைநகரில் தான் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் பயனாளி நளமுடன் இருக்கிறார். அவர் அமெரிக்கா செல்ல தயாராக உள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் பயனாளி மீண்டும் விளையாட்டு துறைகளில் ஈடுபடலாம். இன்றைய கால கட்டத்தில் விளையாட்டு மற்றும் சாலை விபத்துகளினால் இந்த குருத்தெலும்பு காயம் அதிக அளவில் காணப்படுகிறது. அவ்வாறு ஏற்பட்டவர்களுக்கு இந்த AUTOLOGOUS CHONDROCYTE IMPLANTATION (ACI) என்னும் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் விளையாட்டு துறைக்கு செல்லவும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தடுக்கவும் ஒரு வரமாகவே உள்ளது என தெரிவித்தார்.