திருச்சி சத்திர பேருந்து நிலையம் அருகே உள்ள அருணாச்சலம் மன்றத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் சக்தி சூப்பர் ஷி என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம் வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சம உரிமை, அரசியலிலும், பொது வாழ்க்கையிலும் பெண்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சுதந்திர தின கொடியேற்று விழாவில் பெண்கள் தான் கொடியேற்றுவார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் பொருட்டு இந்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 75 இடங்களில் மாவட்ட தலைவர்கள் ஒருங்கிணைப்பில் பெண்கள் கொடியேற்ற உள்ளார்கள்.
நாங்குநேரியில் மாணவர்களிடையே நடைபெற்ற சமூக பிரிவினை மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் மாணவர்கள் மத்தியில் ஜாதி பேசப்படுகிறது என்றால் அரசு இதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற சம்பவம் எங்கும் நடைபெறக்கூடாது. பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் இதனை சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்திட வேண்டும். குறிப்பாக சமூக வலைதளத்தில் தான் ஜாதி அரசியல் அதிகம் பேசப்படுகிறது அரசு இதனை கூடுதல் கவனம் செலுத்தி ஜாதி வெறுப்புணர்வு பேசுகிற யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.
திருவாரூரில் 100-ஆண்டு கால பழமையான கோவில் உள்ளது. இங்கு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பட்டியல் இன சமூக மக்கள் கோவிலில் செல்ல தடுக்கப்படுகிறார்கள். தற்போது கோவிலை பூட்டி விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு எதை நோக்கி செல்கிறது என்ற பயம் தற்போது மேலோங்கி இருக்கிறது.எனவே பட்டியல மக்கள் அங்கு சென்று சாமி கும்பிடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமீபத்தில் திருச்சியில் ஒரு பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அங்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு சென்று விசாரிக்கப்பட்டு அங்கு பணி புரிகின்ற ஐந்து ஆசிரியர்களை கைது செய்து இருக்கிறார்கள். இதனால் அங்கு படிக்கின்ற மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் இடம் கொடுத்து அவருடைய கல்வி பாதிக்காத அளவிற்கு கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும்.
மணிப்பூரில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக மக்கள் பாதிப்புக்குள்ளாகி அங்கு ஒரு பெரிய சமூகப் பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்கிறதா? பாஜக என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது. அண்ணாமலை பாதயாத்திரை நடத்துவது எதற்கென்றால் தொழில் அதிபர்களிடம் பணம் வாங்குவதற்கும், தொழிற்சாலைகளில் அவரது ஆதரவாளர்கள் சென்று வசூல் செய்வதற்கு தான் பாதயாத்திரை நடத்தி வருகிறார். அவர் போகும் இடங்களில் எல்லாம் கடுமையான மக்கள் எதிர்ப்பு, எங்கும் கூட்டமில்லை, இவர்களாக காசை கொடுத்து ஒரு கூட்டத்தை உருவாக்குகின்றனர். அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசை குற்றம் சுமத்தி வருகிறார்.அவர் சொல்லும் எந்த குற்றத்திற்கும் ஆதாரம் இல்லை என கூறினார்…