இந்திய திரு நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணிய புரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் திருச்சி சரக்கு டிஐஜி பகலவன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி,திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் பல அரசு துறை கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பின்னர் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி 1.62 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 157 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.