இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர தினத்தை போற்றும் விதமாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை பாரத பிரதமர் மோடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் அதேபோல் சென்னை கோட்டை கொத்தாலத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் இந்திய உணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல் திருச்சி புதுக்கோட்டை சாலை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தமிழக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தலைமை பொறியாளர் சுப்ரமணியன் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மகாத்மா காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமை பொறியாளர் சுப்ரமணியன் பேசுகையில்:- சுதந்திர தின விழா என்பது சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூற கூடியது இந்நாளில் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் இது போன்ற முக்கியமான நாளில் யார் யார் வரவில்லையோ அவர்களுக்கெல்லாம் மெமோ கொடுத்து விட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்