தென்னக ரயில்வே சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, பெரம்பூர், சேலம், திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் இருந்து ரயில்வே ஊழியர்கள், மாணவ, மாணவிகள் என 72 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு இங்கு 5 நாள் முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் மனித உடல் பாகங்கள், ரத்த காயங்கள், சுட்ட புண், வெந்தப்புண், விஷம் குடித்தவர்கள், விபத்தில் காயம் அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது அவர்களுக்கு முதலுதவி தருவது தொடர்பான செய்முறை பயிற்சி வகுப்புகள் இதன் இயக்கத்தின் தலைவர் சீனிவாசன் தலைமையில் வழங்கப்பட்டது.
மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்து கட்டு போட வேண்டும், பலத்த காயம் அடைந்து நடக்க முடியாதவர்களுக்கு போர்வையை ஸ்ட்ரக்சராக மாற்றி எப்படி தூக்கி செல்ல வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை மாணவ மாணவிகள் செய்து காட்டி அசத்தினர்..இந்த பயிற்சி வகுப்பில் மாநில அமைப்பு ஆணையர் மதிமாறன், மாநில அமைப்பு வழிகாட்டி ஷாலினி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..