தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் லிமிட் திருச்சி மண்டல அலுவலகம் முன்பு சி ஐ டி யு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை மாதம் தொழிலாளர்களிடம் விடுப்பு கடிதம் பெற்றுக் கொண்டு விடுப்பு வழங்காமல் ஆப்சன்ட் போடப்பட்ட கிளை நிர்வாகத்தை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் கிளை தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார்.
கிளை செயலாளர் கார்த்திகேயன் துணைத் தலைவர் முத்துக்கருப்பன் மற்றும் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் மாரியப்பன் சிறப்புரையாற்றினார். முன்னதாக போக்குவரத்து கிளை நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.