சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மண்டல செயலாளர் தீன தயாளன் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர்கள் துரைமுருகன், அய்யப்பன் ,மண்டல துணைத் தலைவர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தின் கொடி ஏற்றி, சங்கத்தின் பெயர் பலகையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், திறந்து வைத்தார். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் ராசப்பன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக :- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பொது விநியோகத்தை பலப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கழக பணியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு இணையான பென்ஷன் வழங்க வேண்டும், குறைந்தபட்ச பென்ஷன் ரூ 9000ம் வழங்க வேண்டும், 2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவகால பணியாளர்களை தாமதம் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், திருச்சி மண்டலத்தில் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதற்கு லாரி மாமூலை கட்டுப்படுத்த வேண்டும், 2001 முதல் இன்டேன் எரிவாயு பிரிவில் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும், கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி உயர்வை உடனே உயர்த்தி வழங்க வேண்டும், இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை தர ஆய்வாளர்களுக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும், பழுதடைந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள பழமையான மண்டல அலுவலக கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் தீனதயாளன் தலைமை வகித்தார். , மாவட்ட தலைவர் சீனிவாசன், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட பொருளாளர் பழனியாண்டி, ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க மண்டல துணை செயலாளர்கள் துரைமுருகன், ஐயப்பன், மண்டல துணைத் தலைவர்கள் சண்முகவேல், வடிவேலன், மண்டல செயற்குழு உறுப்பினர்கள் தினேஷ்குமார், டி. ஐயப்பன் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மண்டல பொருளாளர் சின்னய்யா நன்றி கூறினார்.