திருச்சியின் பாரம்பரியமிக்க பனானா லீப் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் கடை திறப்பு விழா திருச்சி திருவானைக்கோவில் செக்போஸ்ட் அருகே உள்ள திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திறக்கப்பட்டது. இந்த புதிய ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் கடையை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.
அருகில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும் திறப்பு விழாவிற்கு வந்தவர்களை பனானா லீப் மற்றும் ஸ்ரீ அற்புத குழுமத்தின் நிர்வாகிகள் மனோகரன் அவரது மனைவி லதா, செல்லலாம் அவரது மனைவி அனிதா ஆகியோர் வரவேற்றனர்.