திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் வருகிற செப் 2-ம் தேதி திருச்சியில் யாதவர்கள் மாநில மாநாடு நடைபெறுகிறது இதுகுறித்து தமிழ்நாடு யாதவர் பேரவை தலைவர் நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்:-
தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி யாதவர்கள் மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெற உள்ளது அங்கு முன்னாள் மத்திய மந்திரி முலாயம் சிங் யாதவ் முழு உருவ சிலை திறக்கப்படுகிறது இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் யாதவ சமுதாய தலைவர்கள் அனைத்து மாநிலங்களிலிருந்து கலந்து கொள்கிறார்கள் முலாயம் சிங் யாதவ் மகனும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஆன அகிலேஷ் யாதவ் லல்லு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ் வி யாதவ் உள்பட பலர் பங்கே இருக்கிறார்கள் என தெரிவித்தார்.