தமிழ் திரைப்பட நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு மகா வசூல் செய்து வருகிறது. இந்நிலையில்
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று காலை திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த் கோவிலுக்கு வருகை தந்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார்