திருச்சி உழவர் சந்தை உய்யகொண்டான் பகுதியில் அமைந்திருக்கும் மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் பழுதடைந்து, சுகாதாரமற்று இருக்கிறது. அவ்விடங்களை உடனடியாக புதுப்பித்து மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும், தமிழக அமைச்சருமான K.N.நேருவை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர்.கோவன், மாவட்ட செயலாளர் ஜீவா முன்னிலையில் மனு கொடுக்கப்பட்டது.
உடனடியாக மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது ம.க.இ.க மாவட்ட பொருளாளர் தோழர்.சரவணன், கலைக்குழு பொறுப்பாளர் தோழர்.லதா, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் தோழர்.செந்தில், தோழர்.முத்து ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சி மாநகராட்சி மண்டல எண் 5 குழுமிக்கரை சாலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு மணி மண்டபம் கட்டுவது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர் கமால் பாட்ஷா ஆகியோர் உடன் இருந்தனர். கலந்து கொண்டனர்.