திருச்சி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்வு , திருச்சி சாஸ்திரி சாலையில் நடைபெற்றது. திருச்சி மாநகர் வடக்கு துணை ஆணையர் அன்பு மனித சங்கிலி என்னை தொடங்கி வைத்தார்.
இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு கண் தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் உங்கள் கண்கள் வேறொருவரின் உலகமாக அமையட்டும் கண் தானம் செய்வீர் என்ற வாசகங்களுடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மனித சங்கிலியில் ஈடுபட்டனர்..கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இந்த மனித சங்கலில் பங்கேற்றனர்.