திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது விழாவில் திருச்சி சேவா சங்கம் தலைவி சகுந்தலா சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் மேயர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு பிழை எல்லாம் மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ மாணவிகள் மேல் கொண்டுள்ள மாறாத பற்றின் காரணமாக கற்றல் கற்பித்தலில் எந்தவித இடையூறும் இன்றி முழுமையாக கல்வியை பெறுவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது முக்கியமாக மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் தூரத்தை காரணம் காட்டி பள்ளி படிப்பை பாதியில் விட்டு விடாமல் பள்ளிக்கு சென்று வர உதவியாகவும் இடைநிற்றலை முற்றிலுமாக தவிர்த்திடும் பொருட்டும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 259 விலையில்லா மிதிவண்டிகளை மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை நாகம்மை நன்றியுரை வழங்கினார். இந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.