திருச்சி மாவட்டம் மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராசு என்பவர் நேற்று முன்தினம் மருங்காபுரி பகுதியில் நேரிட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் உறவினர்கள் ஒப்புதலுடன் தானம் பெறப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவமனை டீன் நேரு மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையில், ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராசுவின் இதயம் சென்னைக்கும், லிவர், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் மதுரை புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டது.