வ.உ. சிதம்பரனாரின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயர், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட கழக அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் எம்பி ரத்தினவேல், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், ஆவின் தலைவர் கார்த்திகேயன், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .