தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களாக:- நீலகிரி மாவட்டம் கூட்டுறவு பண்டக சாலையில் ஆட்குறைப்பு என்ற பெயரில் பணியில் இருந்து விடுவித்த மூன்று பேரின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அவர்களுக்கு உண்டான பண பலன்களை வலு கட்டாயமாக வங்கிக் கணக்கில் செலுத்தி வேறு நான்கு பேரை பணியில் அமர்த்தியுள்ளது. எனவே பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று பேருக்கு பணி வழங்க கோரியும். தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியின் படி பல்வேறு துறையின் கீழ் இயங்கி வந்த திட்டத்தை ஒரே துறையின் கீழ் இயங்கும் என வாக்குறுதி அளித்தார் .எனவே அதனை விரைந்து இந்த அரசு நடவடிக்கை எடுத்து தனி துறையை உருவாக்க வேண்டும், அதிக வருடங்கள் பணியாற்றிய விற்பனையாளர்கள் இருக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு செய்து கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்ட மாநில பதிவாளரிடம் அந்த குழு சமர்ப்பிக்கப்பட்டது சமர்ப்பிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அரசுக்கு சென்றதா இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை எனவே தமிழக முதல்வர் கூட்டுறவு துறை மற்றும் உணவுத்துறையில் தலையிட்டு எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றி தர வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஊதியம் என்ற அடிப்படையில் ரூபாய் ஆயிரம் வழங்குகிறார்கள் இன்றுள்ள இந்த விலை வாசிக்கு ஆயிரம் ரூபாய் போதாது எனவே அவருடைய பணி காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார். இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தலைவர் மாவட்ட செயலாளர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.