திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்பொழுது பயணி ஒருவர் தனது செருப்பில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி எடுத்து வந்த ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 209 கிராம் தங்க கட்டியை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.