திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், திருச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.