தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் திருச்சி மாவட்டம் சார்பில் தமிழக அரசின் கல்வித் துறையின் மெத்தன போக்கை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அந்தோணி எட்வர்ட் ராஜ், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக என்னும் எழுத்தும் திட்டத்தை கைவிடக் கோரியும், எமிஸ் பதிவு பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிப்பு செய்யக் கோரியும், விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டாம் எனவும், சி ஆர் சி மையங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்த வேண்டாம் எனவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எஸ் எம் சி கூட்டத்தினை நடத்தக்கூடாது எனவும், என்னும் எழுத்தும் திட்டத்தில் மூன்றாம் தரப்பு மதிப்பீடு மற்றும் ஆய்வினை கைவிட கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.