திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் (TGTA) சார்பாக தொடக்க விழா நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து,பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்தப்பட வேண்டும். நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க புதிய அரசாணை வெளியிடும் போது தமிழ்நாடு அரசுஊழியர் சட்டம் 2016,விதிஎண் 41-ன் படி Higher Level of Pay in Pay Matrix என்று உள்ளது.
பட்டதாரி ஆசிரியரே பதவி உயர்வுக்கு தகுதியானவர் என்பது விதி 41-ன் படி சரியானது. தமிழக அரசு விதி எண் 41 ஆசிரியர்களுக்கு பொருந்தும் என அரசாணை வெளியிட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறோம். நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்தாரி ஆசிரியர்களுக்கு நேரடி நியமனத்திலிருந்து 10 சதவீதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியராக சேர்ந்த நாளை பதவி உயர்வுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி விதியினை உடனடியாக வெளியிடவேண்டும்.
மேலும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களுக்கு நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை DI- ஆக நியமிக்க வேண்டும். வட்டாரக் கல்விஅலுவலர் பதவி உயர்வு 50-50 சதவீதமாக இருப்பதை கடந்த காலத்தில் இருந்தது போன்று நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் பதவிஉயர்வு 70-30 சதவீதமாக மாற்றவேண்டும். வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் பொறுப்பு மூத்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும். உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.