வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை அன்றாட பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்கும். உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியானது அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி கீழ்காணும் 2 பிரிவுகளில் ஆண் பெண் இருபாலருக்கும் 07.10.2023 அன்று அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. வயது வரம்பு ஆண்கள் 8 கி.மீ. 10.கி.மீ 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெண்கள் 5கி.மீ.மேற்காணும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பின்வருமாறு பரிசுத் தொகை வங்கி கணக்கில் வழங்கப்படவுள்ளது. முதல் பரிசு ரூ.5000. இரண்டாம் பரிசு ரூ 3000, மூன்றாம் பரிசு ரூ.2000 4 முதல் 10 இடங்களில் வரும் 7 நபர்களுக்கு பரிசு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. விதிமுறைகள்: போட்டிகள் அனைத்தும் காலை 6.00 மணிக்கு துவங்கப்படும்.
போட்டிகளில் கலந்துக் கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆதார்கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் கொண்டு வருதல் வேண்டும். முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பரிசுத் தொகை வங்கி கணக்கில் வழங்க உள்ளதால் வங்கி புத்தக நகலுடன் வருகை தர வேண்டும் வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அண்ணா விளையாட்டரங்கத்திற்கு வயது சான்றிதழுடன் வருகைதர வேண்டும். வயது சான்றிதழ் இல்லாதவர்கள் போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.