திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள மாவட்ட பேருந்து அலுவலகம் முன்பு திருச்சி-கரூர் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட விளக்க உரையை துணைத் தலைவர்கள் கருணாநிதி,சண்முகம், மண்டல பொருளாளர் சிங்கராயர் துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணியன், முருகன் ஆகியோர் வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஒப்பந்தமுறையை முறையை மாற்றி அமைக்க வேண்டும், ஓய்வுதிகளுக்கான அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், புதிய திட்டத்தை கைவிட்டு 15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சண்முகம், சின்னசாமி, சிஐடியு மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன், பொதுச் செயலாளர் மாணிக்கம் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்டத் தலைவர் சீனிவாசன்:- மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மூலமாக ஆட்களை நியமனம் செய்யாமல் ஒன்றிய அரசின் வழிமுறையை கடைப்பிடித்து அரசு ஒப்பந்த முறையில் ஆட்களை எடுப்பதை கண்டிக்கிறோம், ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 96 மாதமாக டிஏ உயர்வு வழங்கப்படவில்லை, ஆனால் அரசு கமிட்டி போட்டு விசாரணை செய்து கொண்டே இருக்கிறது எனவே தான் போராட்டங்களை ஈடுபட வேண்டியிருக்கிறது என தெரிவித்தார்.