திருச்சி டவுன்ஹால் வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது, இந்த அருங்காட்சியகத்தில்பழங்கால கற்சிலைகள் மன்னர் கால வரலாறு மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்பு சிறப்பு அம்சங்கள் போர் கலசங்கள் பழங்கால விலங்குகள் திருச்சி மலைக்கோட்டையில் படங்கள் அதன் வடிவமைப்புகள் கட்டிடகலை வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம் தற்பொழுது இதன் மேம்படுத்தும் பணிக்காக தற்காலிகமாக அருங் காட்சியகம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பல மாதங்களாக நடைபெற்று வரும் இப்பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அதிகாரிகள் பணியாளர்கள் வியந்தனர் மேலும் அங்கு இருக்கும் சிற்பங்கள் மற்றும் கலை சார்ந்த கட்டிடங்களையும் பார்வையிட்டு அதிகாரியிடம் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்,