திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாஜலம் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கோரிக்கை விளக்க உரையை மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஆனந்தராஜா, முத்துக்குமார், ரவி ஆகியோர் வழங்கினர்.
போராட்டத்தின் போது கால்நடை கால்நடை ஆய்வாளர்கள் பயிற்சியை தொடங்க வேண்டும், கால்நடை ஆய்வாளருக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும், உயர் நீதிமன்ற ஆறாவது ஊதிய குழு வழங்கப்பட்ட நியாயமான ஊதியத்தை வழங்கிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உட்பட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநிலத் துணைத் தலைவர் சந்திரா இளங்கோவன் மாவட்ட இணை செயலாளர் தம்பிதுரை மற்றும் நிர்வாகிகள் வெற்றிவேலன், சம்சத்பேகம், எலன்சத்யா உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.