கோவாவில் நடைபெற்ற தங்கப்பதக்கம் சிலம்பம் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் டைனமிக் சிலம்பம் ஸ்ட்ரீட் ஃபயிட் சிலம்பம் அகடாமி,சிலம்பம் கலைக்குழுவினரின் 29 குழந்தைகள் கோவாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளனர் ,
இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு நேரில் அழைத்து வாழ்த்துக்களை கூறி, விருதுகளை அணிவித்தார், இதில் 4.வயது குழந்தை செளபர்னிகாஷாஸ்ரீ தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளதை வெகுவாக பாரட்டினார். மேலும் மேற்பட பாரம்பரிய கலையான சிலம்பம் கலை உலக அளவிலான போட்டியில் பங்கேற்ற 29 குழந்தைகளுக்கும் தமிழக அரசினால் வழங்கப்படும் சலுகைகள் பெற்று தருவதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்,
எனவும் இப்பயிற்ச்சியில் வெற்றி பெற்ற 5 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தை இல்லாத தந்தையால் உதவி இல்லாத குழந்தைகள் மிகவும் ஏழ்மை சூழ் நிலையில் உள்ளதால் இது போன்ற குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் எடுத்து அரசு சார்ந்த உதவிகள் பெற்றுத்தர உதவிட வேண்டும்,என்ற கோரிக்கையும் கூறினர்