ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டத்தின் போது மிரட்டி, வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டமைக்காக தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் :-தமிழ்நாடு அரசு 2 ஆண்டுகளாக எங்களிம் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தள்ளி வருகின்றனர். குறிப்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பை ஒப்படைக்க வேண்டும் ஊக்க தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவிப்போம் ஆனால் தமிழ்நாடு அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார்கள் ஆனால் இதுவரை அதற்கு உரிய தீர்வு காணப்படவில்லை எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது அதன்படி,
நவம்பர் 1 ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், நவம்பர் 25 ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும், டிசம்பர் 28 ஆம் தேதி அன்று சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு எங்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது குறிப்பாக ஆணையப் பணியிட மாறுதல், 151 அரசாணையை திருத்தி அமைத்தம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் 12 அம்ச கோரிக்கைகள், புதிதாக 500 செவிலியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது. இருந்த போதும் எங்களின் பிரதான கோரிக்கையான சிபிஎஸ் ரத்து சரண்டர் உள்ளிட்டவற்றை அரசு நிறைவேற்ற வில்லை ஆனால் தேர்தல் வாக்குறுதியில் அதை நிறைவேற்றுவோம் என அறிவித்தார்கள் ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை அதன் காரணமாகவே தற்போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.