நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் மற்றும் அருஞ் சொற்பொருள் குறித்து புத்தகம் வரும் ஆண்டு வெளியிடப்பட உள்ளது இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதுகுறித்து ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் அரவிந்த் கூறும்போது உலக செம்மொழிகள் ஆறு இதில் தமிழ் மட்டும் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும் இதுவரை எழுதப்பட்ட உரைகளில் இருந்து வேறுபாடு 20 தொகுதிகள் 7500 பக்கங்களில் வெளிவர உள்ளதாகவும்
பலமுறை முன் மதிப்பீடு செய்யப்பட்டு எட்டு பேராசிரியர்கள் கொண்டு உயர்ந்த கட்டமைப்பில் தமிழ்நாட்டில் முதல் முயற்சியாக அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுவதாக கூறினார் . மேலும் இந்நூலில் அகநானூறு ஒரு பாடல் அதன் அடிப்படையில் திணை கூற்றும் அதன் பொருளும் அடங்கும் தொடர்ந்து 15 ஆண்டுகளின் முயற்சியில் இந்த பதிப்பு வெளிவருவதாகவும் இவை கல்லூரி பல்கலைக்கழகங்கள் மற்றும் இன்றி அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறினார் பேட்டியின் போது மேலாண்மை இயக்குனர் சந்தானம் பதிப்பு துறை மேலாளர் சண்முகம் மேலும் தமிழ் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.