ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், 1. 12 .2019க்கு பிறகு பணியில் சேர்ந்த கேங்மேன் உள்ளிட்ட அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பண்டிகை காலம் நெருங்கு வதையொட்டி போனஸ் பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும், டான்ஜெட் கோவை மேலும் துண்டு துண்டுகளாக பிரிக்கக் கூடாது, ஆரம்பக்கட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், இ டெண்டர் முறையை கைவிட்டு மின்வாரியமே நேரடியாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தின கூலி வழங்க வேண்டும்,
பணப்பயன்களை பறிக்கும் வாரிய ஆணை எண் 2/ 12 .4. 2022 ஐ ரத்து செய்ய வேண்டும். கணக்கீட்டு பிரிவில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஸ்மார்ட் மீட்டர், மொபைல் போன் முறையை அமல்படுத்தக் கூடாது, கேங்மேன் ஊழியர்களுக்கு ஊர் மாற்றல், விடுப்பு உள்ளிட்ட வாரிய உத்தரவுகளை உடனே வழங்க வேண்டும், பகுதிநேர பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், டி.என்.பி.இ.ஓ மாநில துணைப் பொதுச் செயலாளர் இருதயராஜ், டி என் இ பி டபிள்யு ஒ வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆகிய பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் பழனியாண்டி நன்றி கூறினார்