திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்து கட்சிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் கடந்த மாதம் எப்எல்சி சரிபார்க்கப்பட்டு வாக்கு இயந்திரங்கள் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் சீல் வைக்கப்பட்டுள்ளதா மற்றும் முறையாக போலீஸ் பாதுகாப்பு உள்ளதா என தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் முன்னிலையில் இன்று காலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிகை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தேசிய கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.