அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தேசிய துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது..
இதன் பின் ரியல் எஸ்டேட் துறையின் தலைவர் ஹென்றி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்… கடந்த 2016ம் ஆண்டுக்கு முன்பாக அங்கீகாரம் அற்ற பட்டா மனுக்களை வாங்கி வைத்துள்ள பொதுமக்களுக்கு தங்களுடைய பட்டா வீட்டு மனைகளை டி டி சி பி அனுமதி பெற்றுக் கொள்ளும் வகையில் மனை வரன்முறை சட்டத்தை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து அங்கீகாரம் அற்ற பட்டா மனுக்களை அங்கீகாரம் செய்ய வழிவகை ஏற்படுத்திய தமிழக அரசுக்கும், வீட்டு வசதி துறைக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம், அதே போல மனைப்பிரிவு அனுமதி, கட்டிடத் திட்ட அனுமதி என எளிமையான முறையில் இணையதள வாயிலாக விண்ணப்பித்து அனுமதி பெறக்கூடிய வகையில் அரசு வழிவகை செய்து இருக்கிறது,
மேலும் எளிய மக்களுக்கும் வீடு வாங்க வேண்டும் என்ற கனவை அரசு நினைவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். மேலும் தற்போது உள்ள அரசை பொருத்தவரை எங்களுடைய கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கும் கிடைத்த மாபெரும் கொடையாக பார்க்கிறோம், மக்கள் நலன் சார்ந்து நாங்கள் வைக்கக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும் மிகவும் எளிமையாக்கி ரியல் எஸ்டேட் துறைக்கு தமிழக அரசு மிகவும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.