திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே ஜமால் முகமது கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டிற்கு தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் தலைமை ஏற்று நடத்தினார்.
ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகா, அசாம் ,கோவா, பாண்டிச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இந்த போட்டியானது கட்டா,குமிட்டே என்ற அடிப்படையில் 175 பிரிவுகளில் கீழ் நடைபெற்றது. காலை முதல் மாலை வரைபடப்பாக நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு சேர்ந்த அணியினர் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். மேலும் இந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு SKWF- னால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள், வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.
மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் அயல்நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்புகளை சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் அயல்நாடுகளில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் பங்கேற்கும் தமிழக கராத்தே வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கராத்தே பயிற்சியாளர் சங்கர் தெரிவித்தார்.