திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.இந்நிலையில் காட்டூர் பகுதியை சேர்ந்த சின்ன பொண்ணு என்பவர் அவரது கணவர் மற்றும் தாயாருடன் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன பொண்ணு இவரது கணவர் ராஜு இதே பகுதியில் கடந்த 35 ஆண்டு காலமாக சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது . மகன் சிவா அவரது மனைவி ஆகியோர் தற்பொழுது தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் தந்தை நடத்தி வரும் சைக்கிள் கடையின் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வரும் வேளையில் மகன் சிவா வேலைக்கு எதற்கும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தாய் தந்தையிடம் உள்ள பணத்தை மிரட்டி பிடுங்கி மது குடித்து வந்தார். அதையும் நாங்கள் பொறுத்துக் கொண்டோம்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி குடிபோதையில் இருந்த மகன் மற்றும் மருமகள் அவரது உறவினர்களுடன் எனது வீட்டிற்குள் வந்து என்னையும் எனது கணவரையும் அடித்து வீட்டை விட்டு வெளியேறுங்கள் மேலும் வீட்டை எனது பேருக்கு எழுதி கொடுங்கள் என கொலை மிரட்டல் விடுத்தனர் இதனால் பயந்து போன நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். நாங்கள் அளித்த புகார் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. இந்த வயதான காலத்தில் நானும் எனது கணவர் மற்றும் எனது தாயார் ஆகிய மூவரும் வாழ்ந்து வரும் இந்த வீட்டை எனது மகன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தோம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.