திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே கள்ளிக்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கள்ளிக்குடி சுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் குணவதி பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்களுடன் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
அரசு நலத்திட்டங்களை முதலில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு என்னனென்ன திட்டங்கள் அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த திட்டங்கள் மூலம் ஒரு பயனாளி இதன் மூலம் பயன்பெற்றர்கள் என்றால் கூட இந்த கிராமசபைக் கூட்டத்தின் வெற்றியாக கருதப்படுகிறது. கிராமம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் கிராம மக்களின் தேவைகளான முதல் கோரிக்கையாக இருப்பது பட்டா வேண்டுமென்ற கோரிக்கை, குடிநீர் வசதி கோரிக்கை. சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல தேவைகள் இருப்பின் அதனை மக்கள் ஒரு மனுவாக எழுதி இந்த கிராம சபையில் கொடுக்கும் பட்சத்தில் அதனை தகுதியின் அடிப்படையில் நிறைவேற்றித்தரப்படும். கிராமசபைக் கூட்டத்தில் தங்களின் பஞ்சாயத்திற்கு எவ்வாறான திட்டங்கள் தேவை என்பதையும், ஏற்கனவே நிறைவேற்றப்பட்டத் திட்டங்களையும் பற்றி பொருட்களை வாசித்து அதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதே இந்த கிராமசபை கூட்டத்தின் நோக்கமாகும். பச்சைமலையில் வாழும் மக்களுக்காக வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய பல திட்டங்ளை விரைவில் நிறைவேற்றுவோம் என தெரிவித்தனர்.