தமிழர்களின் திருநாளான தீபாவளி பண்டிகை வருகின்ற 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆட்டு சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம், இந்த வார சந்தைக்கு திருச்சி மாவட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்தும் தஞ்சாவூர்,சேலம், நாமக்கல்,தம்மம்பட்டி, துறையூர், வேலூர் ,பெரம்பலூர், அரியலூர் , திண்டுக்கல், மதுரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை லாரி மற்றும் டெம்போக்களில் ஏற்றிக்கொண்டு விற்பனைக்கு கொண்டு வந்தனர். அது போல் வாங்குவதற்கும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
இந்த வார சந்தையில் சுமார் 10லட்சம் முதல் 15லட்சம் வரை வழக்கமாக ஆடுகள் விற்பனை நடைபெறும், பண்டிகை கால கட்டங்களில் சுமார் 2 கோடி முதல் 5 கோடி வரை விற்பனையாகும். இந்த நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் வியாபாரம் தொடங்கியது.மழையின் காரணமாக விற்பவர்களும் வாங்குபவர்களும் குறைவாக வந்திருந்தனர். ஆடுகள் குறைவாக இருந்த காரணத்தினால் விலை சற்று அதிகமாக உயர்ந்து ஆடுகளை வாங்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் ரூ 70 லட்சத்திற்கு விற்பனை ஆகியது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.